மக்களே அலர்ட்!! -தமிழகம் முழுவதும் அடுத்த 3 மணி நேரத்திற்கு பரவலாக மழை -வானிலை மையம் அப்டேட்!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், தென்காசி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம் ,நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர், விருதுநகர், திருநெல்வேலி , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, நாமக்கல், கரூர், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.