Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

Crime: உஷார் மக்களே… சென்னையில் ஒரே நாளில் 3 பேரிடம் கைவரிசை காட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்!

11:35 AM Sep 20, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் வெவ்வேறு வகையில், ஒரே நாளில் 3 பேரிடம் மர்ம கும்பல் ஆன்லைன் மோசடியில் ஈடுப்பட்டுள்ளது.

Advertisement

நாள்தோறும் புதுபுது வகையில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போலீசார் தரப்பில் எவ்வளவு விழிப்புணர்வுகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டாலும், மக்கள் ஏமாந்துதான் வருகின்றனர். அந்த வகையில் ஒரே நாளில் சென்னையில் 3 பேரிடம் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் மும்பை போலீஸ் பேசுகிறோம். உங்களின் செல்போன் எண் தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக, TRAI-ல் இருந்து புகார் வந்துள்ளது எனக்கூறி, வேளச்சேரியை சேர்ந்த மென்பொறியாளர் குருபிரசாத்தை தொடர்பு கொண்டுள்ளனர். பின்னர், உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, பணம் கொடுக்க வேண்டும் என அவரை மிரட்டியுள்ளனர். இவ்வாறு மிரட்டி அவரிடமிருந்து ரூ.95 ஆயிரம் பெற்றுள்ளனர்.

அதுபோல தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஆகாஷ் குமார், ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடிய போது, அவரது வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.

மேலும் தனியார் செல்போன் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி, குமரன் நகரை சேர்ந்த சுஜித் குமார் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து, ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் புகார் செய்ததை அடுத்து, இதுதொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
ChennaiCyber crimeonline fraud
Advertisement
Next Article