Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோயிலில் ஆடிப் பூர திருவிழா - அம்மனுக்கு 1,50,000 வளையல் அலங்காரம்!

09:29 AM Aug 08, 2024 IST | Web Editor
Advertisement

ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோயிலில் ஆடிப் பூர திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு 1,50,000 வளையலால் அலங்காரம் செய்யப்பட்டது.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய சுந்தர பாண்டிய
மன்னரால் கட்டப்பட்ட தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோயில் மிகவும்
பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த ஆலயம் இரண்டாவது குருஸ்தலமாகவும் விளங்கி
வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப் பூரத்தை முன்னிட்டு
ஆலயத்தில் உள்ள தர்மஸம்வர்த்தினி அம்மனுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட வளையல்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.

இதையும் படியுங்கள் :பாரிஸ் ஒலிம்பிக் : ஒரு கிலோவில் பறிபோன பதக்கம் – 4வது இடம்பிடித்தார் மீராபாய் சானு!

அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று அதன்பின்னர் தர்மஸம்வர்த்தினி
அம்பாள் வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் பல்லாரி இசை முழங்க ஆலயத்தில் உள்புறமாக தர்மஸம்வர்த்தினி அம்பாள் உற்சவமூர்த்தி அலங்கரிக்கப்பட்டு உலா வலம் வந்து பின்னர் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள்
அம்மனுக்கு வளையல் சாற்றி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Tags :
AlangudidevoteesDharmasamvarthini Sametha Namapuriswarar templePudukottaisami dharsan
Advertisement
Next Article