Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சமாஜ்வாதி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அகிலேஷ் யாதவ்!

07:24 PM Jan 30, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார்.

Advertisement

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாதி, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சிகள் இந்தியா கூட்டணியின் கீழ் போட்டியிட உள்ளன. ஏற்கெனவே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று காங்கிரஸுக்கு 11 தொகுதிகளும், ராஷ்ட்ரீய லோக் தளத்துக்கு 7 தொகுதிகளையும் சமாஜ்வாதி ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், சமாஜ்வாதி போட்டியிடும் 62 தொகுதிகளில் முதல்கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் யாதவ் இன்று வெளியிட்டுள்ளார்.

இதில், அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மீண்டும் மெயின்புரி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில் முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு பிறகு மெயின்புரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிம்பிள் யாதவ் முதல்முறையாக எம்பியானது குறிப்பிடத்தக்கது.

Tags :
Akhilesh YadavCandidatesLok Sabha Elections 2024news7 tamilNews7 Tamil UpdatesPresidentSamajwadi Partyuttar pradesh
Advertisement
Next Article