தெலங்கானா இடைக்கால சபாநாயகராக அக்பருதீன் உவைசி நியமனம் - பாஜக எதிர்ப்பு!
தெலங்கானா மாநிலத்தின் இடைக்கால சபாநாயகராக அக்பருதீன் உவைசி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானாவின் 119 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தெலங்கானாவில் பெரும்பான்மைக்கு தேவை 61 இடங்கள். இந்நிலையில், தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்று தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது.
இந்த நிலையில் மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் (MIM) கட்சியின் சந்திரயான்குட்டா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அக்பருதீன் உவைசி இன்று (டிச.9) ஆளுநர் மாளிகையில் இடைக்கால சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, தெலங்கானா சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு இடைக்கால சபாநாயகர் அக்பரூதீன் உவைசி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், தெலங்கானாவில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் 8 சட்டமன்ற
உறுப்பினர்களும் அக்பருதீன் உவைசி முன் பதவியேற்க மறுத்துவிட்டனர்.