"விடாமுயற்சி தடய ஒடச்சு... " - இணையத்தை கலக்கும் 'AK Anthem'!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கைவசம் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் உள்ளன. இதில் விடாமுயற்சி திரைப்படம் நாளை (பிப்.6) வெளியாகிறது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது. அடுத்தாக ’சவடிகா’ மற்றும் ’பத்திகிச்சு’ பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், 'AK Anthem' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் விடாமுயற்சி படத்தின் போஸ்டர்கள் மற்றும் அவர் கலந்துக்கொண்ட கார் ரேஸ் சமந்தமான வீடியோக்களும், பயிற்சி செய்த வீடியோக்களும் இடம்பெற்றுள்ளனர். இதனை அஜித் குமார் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.