Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

GOAT படத்தில் இணைந்தார் அஜித் பட நடிகை..!

09:22 PM Jan 04, 2024 IST | Web Editor
Advertisement

விஜய் நடித்து வரும் GOAT படத்தில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் நடித்த நடிகை இணைந்துள்ளார்.

Advertisement

நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படமான Greatest Of All Time திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.  இந்த திரைப்படம்,  அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

லைலா,  மீனாட்சி சவுத்ரி,  பிரசாந்த்,  பிரபுதேவா உள்ளிட்டோர் இதில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ஸ்னேகா,  மோகன்,  ஜெயராம்,  அஜ்மல்,  யோகிபாபு,  VTV கணேஷ், வைபவ், பிரேம்ஜி,  அர்விந்த் ஆகாஷ்,  அஜய்ராஜ் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர்.

படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெற்றது.  இப்படத்திற்கான ஷூட்டிங்  பேங்காக்கில் நடைபெற்று வந்தது.  இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் தொடங்குவதாக கூறப்பட்டு வந்தது.  ஜனவரி முதல் வாரம் தொடங்கும் இந்தப் படப்பிடிப்பில் விஜய்யுடன் மற்ற நடிகர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

ஹாலிவுட் ஹீரோவான ஸ்மித் நடித்த ‘ஜெமினி மேன்’ படத்தின் ரீமேக்காக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  Greatest Of All Time திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் தொடங்குவதாகவும் அதில் விஜய் அப்பா , மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின  இந்நிலையில் Greatest Of All Time திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகியது.

இந்த நிலையில் GOAT படத்தின் நடிகர்களில் புதிதாக பார்வதி நாயர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  “ எனது கனவு நனவாகி உள்ளது, விஜயுடன் படத்தில் இணைந்தது மகிழ்ச்சி” என பார்வதி நாயர் X தளத்தில் பதிவு செய்துள்ளார். பார்வதி நாயர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :
goatParvathi Nairvenkat prabhuvijay
Advertisement
Next Article