மீண்டும் விபத்தில் சிக்கியது அஜித்தின் கார் !
இத்தாலியில் ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. நடிகரும் ரேசஸருமான அஜித்குமார் குட் பேட் அக்லி படம் வெளியானதை அடுத்து இந்த கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், இன்று பந்தயத்தின்போது அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. வளைவில் வேகமாக திரும்பும்போது, சர்க்யூட்டின் நடுவில் பழுதாகி நின்றுகொண்டிருந்த மற்றொரு கார் மீது அஜித்தின் கார் மோதியது. இதனால் அஜித் காரின் இடதுபுற முன்பகுதி உடைந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த அஜித்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. தற்போது விபத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்குவது, இது முதன் முறை அல்ல. போர்த்துகல் துபாய் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நடந்த போட்டிகளிலும் அஜித்தின் கார் விபத்துகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.