Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பதியில் நடிகர் அஜித் சுவாமி தரிசனம்.. புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

04:07 PM Jun 17, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் அஜித்குமார் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்  ‘விடாமுயற்சி’. இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பின் போது அஜித்தும், ஆரவ்வும் விபத்தில் சிக்கி உயிர்பிழைத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனையடுத்து இந்தப் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

இதனையடுத்து இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும், இன்னும் 20-30% படப்பிடிப்பே மீதமுள்ளது எனவும் நடிகர் அர்ஜூன் நேற்று தெரிவித்தார். இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் செல்வதற்கு முன்னர் நடிகர் அஜித்குமார் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும்நிலையில், வரும் தீபாவளி மற்றும் பொங்கலுக்கு இத்திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

Tags :
Ajithkumarak62Magizh ThirumenishootingthirupathiVidaaMuyarchi
Advertisement
Next Article