Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அஜித் நடிக்கும் "Good Bad Ugly" படத்தின் அப்டேட் - இன்று மாலை வெளியாகும் என அறிவிப்பு!

04:46 PM May 19, 2024 IST | Web Editor
Advertisement

அஜித்குமார் நடிக்கும் ‘Good Bad Ugly’  திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6.31 மணிக்கு வெளியாக உள்ளது.

Advertisement

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைகிறார். இது தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த திரைப்படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என தலைப்பிடப்பட்டுள்ளது.  தேவி ஸ்ரீ பிரசாத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்துக்காக அஜித் எடையை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சிட்டி ஒன்றில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும், பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : “தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கப்படலாம்” – அரவிந்த் கெஜ்ரிவால்!

இந்நிலையில்,  நடிகர் அஜித்குமார் நடிக்கும் ‘Good Bad Ugly’ படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6.31 மணிக்கு வெளியாக உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே திரைப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து நடிக்கும் நடிகை அல்லது பிற நடிகர்கள் பற்றிய தகவலாக இந்த அப்டேட் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
ajithcinema updateGood Bad UglyReleaseupdate
Advertisement
Next Article