Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அஜித் என்னுடைய இன்ஸ்பிரேஷன்” - கோவையில் நடிகர் மணிகண்டன் பேட்டி!

கோவையில் நடைபெற்ற குடும்பஸ்தன் பட நிகழ்ச்சியில் அஜித்குமார் தனது இன்ஸ்பிரேஷன் என மணிகண்டன் பேசியுள்ளார்.
08:05 AM Jan 17, 2025 IST | Web Editor
Advertisement

குட் நைட், லவ்வர் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மணிகண்டன் நடித்திருக்கும் திரைப்படம் ‘குடும்பஸ்தன்’. எஸ்.வினோத் குமார் தயாரித்துள்ள இப்படத்தை யூடியூப் வீடியோக்களின் மூலம் பிரபலமான ராஜேஸ்வர் காளி சாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் குரு சோமசுந்தரம், சான்வி மேகனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Advertisement

வைஷாக் இசையமைத்துள்ள இப்படத்தில் ஷான் ரோல்டன் பாடியுள்ள  ‘ஜீரோ பேலன்ஸ் ஹீரோ’ என்ற பாடலும் ஜிவி பிரகாஷ் பாடியுள்ள  ‘கண்ண கட்டிகிட்டு’ பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. இப்படம் வருகிற ஜன. 24ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி
பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் மணிகண்டன், சான்வி மேகனா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது மணிகண்டன் குடும்பஸ்தன் படம் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.

அவர் பேசியதாவது, “நடுத்தர குடும்பஸ்தன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. படத்தில் துக்கம் இன்பம் அனைத்தும் இருக்கும் சோகமாக இல்லாமல் சந்தோஷமாக காமெடியாக இருக்கும்” என்றார். தொடர்ந்து நடிகர் அஜித்குமார் தொடர்பான கேள்விக்கு அவர், “அவர் என்னுடைய இன்ஸ்பிரேஷன்” என கூறினார்.

Tags :
actor manikandanajith kumartamil moviethala ajith
Advertisement
Next Article