Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'#GOAT’ | விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

07:35 AM Sep 05, 2024 IST | Web Editor
Advertisement

விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளநிலையில், முதல் ஆளாக நடிகர் அஜித் படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.

Advertisement

திரையுலகில் விஜய் அறிமுகமாகி இந்த வருடத்துடன் 32 ஆண்டுகள் நிறைவடைகிறது. திரைவாழ்க்கையை தொடர்ந்து அரசியலில் ஈடுபட்ட விஜய், இந்தாண்டு தொடக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார். கையெழுத்தான படங்கள் முடிந்ததும், முழு அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகைக்கு பின், திரைக்கு வந்துள்ள படம் ‘தி கோட்’. லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு  இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இன்று வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு உச்ச நட்சத்திரமான அஜித் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடக்கத்திலிருந்தே மங்காத்தா படத்தை விட 100 மடங்கு நன்றாக இந்த படம் வர வேண்டும் என அஜித் வாழ்த்தினார் என்றெல்லாம் பேட்டிகளில் வெங்கட் பிரபு சொன்ன நிலையில், இன்றும் முதல் ஆளாக தனது வாழ்த்தை விஜய்க்கும், படக்குழுவிற்கும் அஜித் தெரிவித்துள்ளார். இதனை இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், முதல் ஆளாக என்னை, விஜய்யை, படக்குழுவை வாழ்த்திய தல அஜித்துக்கு நன்றி என வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Next Article