Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விடாமுயற்சி படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - ஆலோசனையில் அஜித் - மகிழ் திருமேனி..!

01:34 PM Jan 28, 2024 IST | Web Editor
Advertisement

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் படப்பிடிப்பை சென்னையில் நடத்த அஜித் மற்றும் மகிழ் திருமேனி முடிவெடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது

Advertisement

அஜித்தின் நடிப்பில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைபடத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் என பலர் நடித்து வருகின்றனர். விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்திலிருந்து அவ்வப்போது புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியான வண்ணம் இருக்கின்றன. திரைப்படம் வெளியாவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும், லைக்காவின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் முதல் அஜர்பைஜானில் நடைபெற்று வருகின்றது.

இதையும் படியுங்கள்; மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஒழிக்க சதி: யுஜிசி வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும்! -பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

இத்திரைப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி திரைப்படத்திற்குப் பின் அஜித் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் புதிய தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை அஜர்பைஜானில் நடத்தவே படக்குழு முடிவெடுத்திருந்தது. ஆனால் தற்போது அஜர்பைஜானில் பனிப்பொழிவு இருந்து வருவதால் படப்பிடிப்பை ரத்து செய்துள்ளது. எனவே, விடாமுயற்சி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எங்கு எடுக்கலாம் என்ற ஆலோசனையில் அஜித் மற்றும் மகிழ் திருமேனி ஈடுபட்டு வருகின்றனர். படப்பிடிப்பை நடத்தமுடியாது என்பதால் மகிழ் திருமேனி  திட்டத்தை மாற்றி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
#cinemaupdatesவிடாமுயற்சிajithak62MagizhThirumenimovieNews7Tamilnews7TamilUpdatesThalaTrishaVidaaMuyarchi
Advertisement
Next Article