Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அஜித்பவாரின் வசமான தேசியவாத காங்கிரஸ்! கட்சியை நிறுவிய சரத்பவாருக்கு கடிகாரம் சின்னம் கிடையாது என தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

08:51 PM Feb 06, 2024 IST | Web Editor
Advertisement

அஜித்பவாரை தேசியவாத காங்கிரஸ் தலைவராக அங்கீகரித்தது அக்கட்சியின் சின்னமான கடிகாரத்தை அஜித்பவாருக்கு வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

Advertisement

நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்த சரத் பவார் பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.

மகாராஷ்டிராவில் முக்கிய கட்சியாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த ஆண்டு உள்கட்சி மோதல் வெடித்தது. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், கட்சியில் குழப்பதை ஏற்படுத்தி உடைத்தார். மேலும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசில் இணைந்து துணை முதல்வரானார்.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவாரும் அஜித் பவாரும் உரிமை கொண்டாடி வந்தனர். இருதரப்பிலும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த தேர்தல் ஆணையம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை அஜித்பவாருக்கு ஒதுக்கியுள்ளது. அந்த அறிவிப்பில், அஜித்பவாருக்கே அதிக ஆதரவு நிர்வாகிகள் இருப்பதால் அவருக்கே கடிகாரம் சின்னம் ஒதுக்கப்படுவதாகவும் சரத்பவார் தனக்கு விருப்பமான பெயரை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Ajit PawarElection commissionMaharashtraMaharashtra AssemblyNCPnews7 tamilNews7 Tamil UpdatesNumerical StrengthReal NCPSetbackSharad Pawar
Advertisement
Next Article