Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இயக்குநர் சங்கத்திற்கு #aishwaryarajinikanth ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் நிதி உதவி!

01:07 PM Sep 14, 2024 IST | Web Editor
Advertisement

கல்வி உதவி தேவைப்படும் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு ஆண்டுதோறும் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement

இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் தங்களது குழந்தைகளின் கல்வி செலவுக்கு கஷ்டப்படுவதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கேள்விப்பட்டுள்ளார். இதனை அடுத்து இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்களை அழைத்து வருடந்தோறும் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

மேலும், இதன் முதற்கட்டமாக நேற்று (செப்.13) 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை இயக்குநர் சங்கத்தின் தலைவர் ஆர்.வி.உதயகுமாரிடம் வழங்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவருடன் செயலாளர் பேரரசு, பொருளாளர் சரண், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது நிர்வாகிகள் இயக்குநர்கள் எழில், சி.ரங்கநாதன், மித்ரன் ஜவகர், எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு நன்றி தெரிவித்தார்கள். முதற்கட்டமாக, 2024-ம் ஆண்டில் உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு உதவி செய்ய இயக்குநர் சங்கம் முடிவு செய்திருக்கிறது.

Tags :
ரஜினிஐஸ்வர்யாAishwarya rajinikanthRajinikanth
Advertisement
Next Article