Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஏர்டெல் சேவை பாதிப்பு - பயனர்கள் கடும் அவதி!

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் தொலைதொடர்பு சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
09:50 PM May 13, 2025 IST | Web Editor
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் தொலைதொடர்பு சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement

ஏர்டெல் தொலைதொடர்பு சேவை தமிழ்நாட்டின் சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதே போல் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் சேவை பாதிக்கப்பட்டதாகவும் அதன் பயனர்கள் தங்கள் சமூக வலைத்தளப் பதிவுகளில் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இது குறித்து ஏர்டெல் நிறுவன தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தியாவில் ஜியோவுக்கு அடுத்து பிரதான தொலைதொடர்பு சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்குவதால், அதன் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் 3% சரிந்து ரூ.11,022 கோடியாக உயர்ந்ததாக ஏர்டெல் நிறுவனம் இன்று(மே.13) அறிவித்தது. இது ஏர்டெல் நிறுவனத்தின் கடந்தாண்டு காலாண்டை (ஜனவரி - மார்ச்) ஒப்பிடும் போது ஐந்து மடங்கு அதிகமாகும்.

Tags :
airtelAirtel DownAirtel serviceBharti Airtel
Advertisement
Next Article