Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் விடிய விடிய வாணவேடிக்கை; மோசமடைந்த காற்றின் தரம்!

07:38 AM Nov 13, 2023 IST | Web Editor
Advertisement

நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்ததைத் தொடர்ந்து சென்னையில் 4 இடங்களில் காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

Advertisement

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் நேற்று காலையிலிருந்து பட்டாசு வெடித்ததன் விளைவாக, சென்னையில் 4 இடங்களில் காற்றின் தர குறியீடு (AQI) 200-ஐ தாண்டியது. சென்னையில் பல்வேறு இடங்களில் காற்று தரக் குறியீடு 150 முதல் 259 வரை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக, ஆஸ்துமா போன்ற நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இதய நோய் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குப் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி….

அதிகபட்சமாக சென்னையில் பதிவான காற்றின் தரக்குறியீடு:

மணலி- 259

பெருங்குடி- 228

ஆலந்தூர் - 216

வேளச்சேரி - 209

அரும்பாக்கம் -198

ராயபுரம் - 158

கொடுங்கையூர் -150, என்ற அளவில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. இதைத் தவிர்த்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 255 என்ற அளவில் காற்றின் தரம் குறைந்துள்ளது.  மேலும்,

செங்கல்பட்டில் - 231

வேலூரில் - 180

கடலூரில் - 175

புதுச்சேரியில் - 164

சேலம் -142

ராமநாதபுரம் - 121

தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவாக நீலகிரியில் (AQI) 20ஆக காற்றின் தரம் பதிவாகியுள்ளது. மேலும் தொடர்ந்து காற்றின் தரத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது.

Tags :
4 PlacesAirQualityAirQualityIndexChennaiCrosses200TamilNadu
Advertisement
Next Article