Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தரையிறங்க முடியாமல் வானில் தத்தளித்த ஏர் இந்தியா விமானம்... அதிர்ச்சியில் உறைந்த 164 பயணிகள்!

மும்பையில் இருந்து 164 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் இந்தியா விமானம், தரை இறங்க முடியாமல் அரை மணிநேரம் வானில் வட்டமடித்துள்ளது.
07:04 PM Apr 02, 2025 IST | Web Editor
Advertisement

மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானம் தினசரியாக காலை 11 மணிக்கு சென்னை வந்து, மீண்டும் காலை 11:45 மணிக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்லும். அதன்படி இன்று ஏர் இந்தியா விமானம் மும்பையில் இருந்து 164 பயணிகளுடன் புறப்பட்டு சென்னை வந்தது.

Advertisement

சென்னை வந்த விமானம், ஒடுபாதையில் தரையிறங்குவதற்காக தாழ்வாகப் பறந்துபோது, விமானம் ஓடுபாதையில் சரியாக பொருந்தாத காரணத்தால்  உடனடியாக மீண்டும் மேல் நோக்கி பறந்தது. அதன் பின் சுமார் 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் விமானம் தரையிறங்க முற்பட்டது. ஓடு பாதையில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதால், 2வது முறையும் தரையிறங்காமல் வானில் பறந்தது.

பின்னர் 3வது முறையாக காலை 11.30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. சென்னை விமான நிலைய ஓடுபாதையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஏர் இந்தியா விமானம் தரை இறங்க முடியாமல்,2 முறை முயற்சித்து, சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்து, அதன்பின்பு 3வது முறையாக, சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.

இதனால் விமானத்தில் இருந்த 164 பயணிகள் சற்று அதிர்ச்சி அடைந்த நிலையில் காணப்பட்டனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்பு அந்த விமானம் சென்னையில் இருந்து மதுரைக்கு பகல் 12.23 மணிக்கு, 107 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் விசாரித்த போது, ஏர் இந்தியா விமானம் தரையிறங்க வந்த போது, ஒடுபாதையில் சாதகமான சூழ்நிலை இல்லாததால், 2 முறை மேலே பறந்து விட்டு, 3வது முறையாக பத்திரமாக தரையிறங்கியது. எங்களுக்கு விமானம் குறித்த நேரத்தில் தரை இறங்குவதை விட, விமானத்தில் இருக்கும் பயணிகளின் பாதுகாப்பு முக்கியமானது.

மேலும் இதேபோல் விமானம் தகுந்த சூழ்நிலை இல்லாத நேரங்களில், தரையிறங்காமல் வானில் உயரப் பறந்து, தகுந்த சூழ்நிலை ஏற்பட்ட பின்பு, தாமதமாக தரை இறங்குவது வழக்கமான ஒன்றுதான். எனவே இதில் எந்தவிதமான அச்சமும் இல்லை. அதே நேரத்தில் இதனால் பயணிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.

Tags :
Air India flightchennai airportLanding Issuepassengers
Advertisement
Next Article