Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

களத்தில் இறங்கிய விமானப்படை | வெள்ளத்தில் மிதக்கும் பகுதிகளில், ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்!

12:45 PM Dec 06, 2023 IST | Web Editor
Advertisement

சென்னையில் மிக்ஜாம் புயலால் துண்டிக்கப்பட்ட பகுதிகளில்,  ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணப் பொருட்களை இந்திய விமானப்படை விநியோகித்தது.

Advertisement

டிசம்பர் 3-ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் 4ம் தேதி வலுப்பெற்று சென்னை அருகே நிலைகொண்டிருந்தது.  இதனால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இதில்,  சென்னையின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டு,  பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டது.  இந்நிலையில்,  தமிழக அரசுடன் இணைந்து,  இந்திய விமானப் படை 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கியது.

இதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் ரேசன் பொட்டலங்கள் அடையாறு மற்றும் சென்னை துறைமுகம் பகுதியில் விநியோகிக்கப்பட்டன.

Advertisement
Next Article