#Tenkasi | குற்றாலநாதர் சுவாமி கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
தென்காசி அருகே உள்ள குற்றாலநாதர் சுவாமி கோயிலில் ஐப்பசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்டத்தின் சிறந்த சுற்றாலா தலமான குற்றாலம் பகுதியில் அமைந்துள்ள திருகுற்றாலநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா, ஐப்பசி திருவிழா மற்றும் மார்கழி திருவாதிரை ஆகியவை வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஐப்பசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, குற்றாலநாதர் சுவாமி கோயிலுக்கு எதிரே உள்ள கொடிமரத்திற்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படியுங்கள் : #Rainupdate | தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் இறுதிநாள் வரை காலை மற்றும் இரவு சாமி,அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளது.