“2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒன்று சேர்ந்து ஒரே அணியில் போட்டியிடும்!” - வி.கே.சசிகலா
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒன்று சேர்ந்து ஒரே அணியில்
போட்டியிடும் என்று வி.கே. சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சீதாம்பாள்புரம் அருகே தனியார்
திருமண மண்டபத்தில் நடைபெற்ற காதணி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வி.கே. சசிகலா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது, வி.கே. சசிகலா கூறியதாவது:
என்னைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது மக்கள் தான்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் பலம் என்பது என்ன என்று எல்லோருக்கும்
புரியும். மூன்று அணியாக இருக்கின்ற அதிமுக ஒன்றாக இணைய வாய்ப்பு வந்ததாக
எனது அனுமானத்தில் கருதுகிறேன். தமிழக அரசு தேர்தல் காரணம் சொல்லி எவ்வித ஆக்கப்பூர்வமான செயல்களிலும் ஈடுபடாமல் உள்ளது. தூத்துக்குடியில் துப்புரவு பெண் ஒருவர் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை என்ன செய்து வருகிறது. ஆவின் பாலில் புழு, பூச்சி உள்ளது. அரசு அதை தடுக்க தவறிவிட்டது. தமிழக அரசின் தற்போதைய கவனம் எப்படியாவது பொய் சொல்லி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது.
இவ்வாறு வி.கே.சசிகலா கூறினார்.