Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு!

02:02 PM Mar 24, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. மார்.20 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. மார்ச் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28-ஆம் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. வேட்புமனுக்கள் காலை 11 முதல் மாலை 3 மணி வரை பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 33 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடுவது குறிப்பிடதக்கது.

Tags :
ADMKedappadi palaniswamiElection2024Nomination PetitionParlimentary Election
Advertisement
Next Article