Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Diwali பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய செஞ்சி ஆட்டுச் சந்தை... 4 மணி நேரத்தில் ரூ.6 கோடிக்கு விற்பனை!

09:57 AM Oct 25, 2024 IST | Web Editor
Advertisement

தீபாவளி பண்டிகை இன்னும் ஒரு சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் செஞ்சி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது.

Advertisement

தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருசில தினங்களே இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில், ஜவுளி கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். அதே நேரத்தில், ஆட்டுச் சந்தைகளில் விற்பனை சூடு பிடித்துள்ளது. வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஆடு, கோழிகளை வாங்க அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமைதோறும் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் ஆடுகளை தேனி, கம்பம், கிருஷ்ணகிரி, ஓசூர், ஆம்பூர், வேலூர், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்வர்.

வழக்கம் போல், செஞ்சியில் நடைபெற்ற வார ஆட்டுச் சந்தையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். இந்த சந்தையில், வெள்ளாடுகள் ஜோடி ரூ.15,000 முதல் ரூ.35,000 ஆயிரம் வரையிலும், செம்மறி ஆடுகள் ஜோடி ரூ.25,000 முதல் ரூ.40000 ஆயிரம் வரையிலும், குறும்பாடுகள் ஜோடி ரூ.30,000 முதல் ரூ.50,000 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆட்டுச் சந்தை இன்று அதிகாலை 3 மணியளவில் துவங்கிய நிலையில், ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆட்டுச் சந்தை தொடங்கிய சுமார் 4 மணி நேரத்திலேயே ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement
Next Article