Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குளத்தில் கரை உடைந்து வயலுக்குள் புகுந்த நீர் - விவசாயிகள் கவலை!

01:25 PM Nov 09, 2023 IST | Student Reporter
Advertisement

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குளத்தில் கரை உடைப்பு ஏற்பட்டு, விவசாய நிலங்கள் வழியாக வெள்ள நீர் வெளியேறி வருகிறது.

Advertisement

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர், கூடக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் நீர் தேக்க குளம் ஒன்று உள்ளது.  இந்த குளத்தில் சேகரமாகும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நேற்று இரவு நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு பெய்த கன மழை காரணமாக
வரப்பாளையம்,  கொண்டயம்பாளையம் , இருகாலூர் வழியாக  வருகின்ற உபரி நீர் கூடக்கரை அருகே உள்ள குளம் வழியாக  வெளியேறி வந்த நிலையில்,  தற்போது வெள்ள நீர் அதிகமான நிலையில் கரை உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் வழியாக வெள்ள நீர் வெளியேறி வருகிறது.  இதனால், அப்பகுதியில் பயிரிடப்பட்டு இருக்கும் நெற்பயிக்கள் நீரில் மூழ்கியுள்ளது.

மேலும் கனமழையால்,  அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள்,பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

Tags :
#affectedagricultural landsHeavy rainKopisetipalayam
Advertisement
Next Article