Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
03:48 PM Mar 15, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மார்ச் 14) தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட்டில் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மகளிர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன.

Advertisement

இதனைத்தொடர்ந்து இன்று 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த நிலையில், பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

"நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில்,

வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு,

முதலமைச்சரின் 1000 உழவர் நலச் சேவை மையங்கள்,

புதிய தொழில்நுட்பங்கள்,

சிறு குறு விவசாயிகள் நலன்,

மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்,

டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம்,

வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் அலகுகள் அமைக்க நிதியுதவி

எனப் பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று #TNAgriBudget2025 வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்!"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Agri BudgetBudgetBudget2025cm stalinMK Stalinmrk panneer selvamnews7 tamilNews7 Tamil Updatestn Budget
Advertisement
Next Article