Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2,000 புதிய விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் - பிரதமர் நரேந்திர மோடி!

விமான நிறுவனங்கள் 2,000 விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
01:43 PM Apr 14, 2025 IST | Web Editor
Advertisement

பிரதமர் நரேந்திர மோடி ஹரியாணா மாநிலம் ஹிசார் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அயோத்திக்கு விமான சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதனை தொடர்ந்து புதிய முனையக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து, பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஹிசார் அயோத்தி விமான சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார். தொடந்து பேசியதாவது,

Advertisement

"2014 ஆம் ஆண்டுக்கு முன் நாட்டில் வெறும் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இன்று 150 விமான நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பயணிகளின் எண்ணிக்கை சாதனை படைத்து வருகின்றன. விமான நிறுவனங்கள் 2,000 விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன.

காங்கிரஸ் அரசியலமைப்பை அதிகாரத்தைப் பெறுவதற்கான ஒரு கருவியாக மாற்றியது. அவசரநிலையின் போது, அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அரசியலமைப்பு கொல்லப்பட்டது. அரசியலமைப்பு மதச்சார்பற்ற சிவில் சட்டத்தைப் பற்றிப் பேசுகிறது, ஆனால் காங்கிரஸ் அதை ஒருபோதும் செயல்படுத்தவில்லை. இன்று, உத்தரகண்டில் சிவில் சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் இதை எதிர்க்கிறது.

இடஒதுக்கீட்டின் பலன்கள் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களைச் சென்றடைந்ததா என்பதை காங்கிரஸ் ஒருபோதும் சரிபார்க்கவில்லை. காங்கிரஸ் தனது சொந்த நலனுக்காக வக்ஃப் விதிகளையும் மாற்றியது. வக்ஃப் என்ற பெயரில் லட்சக்கணக்கான ஹெக்டார் நிலங்கள் உள்ளன. வக்ஃப் சொத்துக்கள் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தால், அது அவர்களுக்குப் பயனளித்திருக்கும்.

ஆனால், நில மாஃபியாக்கள்தான் பயனடைந்து வந்தார்கள். ஏழைகளின் சொத்துகள் கொள்ளையடிக்கப்படுவது இந்த சட்டத்தின் மூலம் நிறுத்தப்பட்டுள்ளது. புதிய வக்ஃப் சட்டத்தின் கீழ், எந்தவொரு ஆதிவாசிக்கு சொந்தமான நிலத்தையோ அல்லது சொத்தையோ வக்ஃப் வாரியம் தொட முடியாது. இதுதான் உண்மையான சமூக நீதி" எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
AgreementNarendra modinew aircraftprime ministerPurchasespeech
Advertisement
Next Article