Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆயன்குளம் அதிசய கிணறு மீண்டும் தண்ணீரை உள்வாங்கிறது - விவசாயிகள் மகிழ்ச்சி!

10:55 AM Dec 22, 2023 IST | Web Editor
Advertisement

நெல்லை மாவட்டத்தில் ஆயன்குளம் அதிசய கிணறு தண்ணீரை உள்வாங்கவில்லை என சமூக வலைதளங்களில் வந்த நிலையில், தற்போது கிணறு தண்ணீரை உள்வாங்குவதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

Advertisement

நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளை ஆயன்குளம் படுகையில் முதுமொத்தான்மொழியை சேர்ந்த சண்முகவேல்பாண்டியன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இந்த கிணறு நீரை உள்வாங்கி கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் 500 கன அடிக்கும் மேல் தண்ணீர் வந்து கிணற்றுக்குள் புகுந்து நீரை உள்வாங்கிக் கொண்டிருந்தது.

இதையும் படியுங்கள் : வெளியானது சலார் | எப்படி இருக்கு படம்?... ரசிகர்கள் கூறுவது என்ன?... 

கால்வாய் பணிகள் நடந்து கொண்டிருப்பதால், அந்த கிணற்றில் அதிக நீர்வரத்து ஏற்பட்டு  பொருட்கள் அடித்து செல்லப்பட்டதால் கிணறு நீரை உள்வாங்குவது சற்று தடைப்பட்டது. இதனால் கிணற்றிற்கு வரும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. 

மீண்டும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கிணற்றை சுத்தம் செய்தனர். கிணற்றை சுத்தம் செய்த பின் கிணறு தற்போது தண்ணீரை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் விவசாய பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த கிணறு நீரை உள்வாங்குவதன் மூலம் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீரோட்டம் அதிகமாக இருப்பதாக விவசாயிகள் கருதுகின்றனர். எனவே தொடர்ந்து அதிசய கிணற்றிற்கு தண்ணீர் வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கிணற்றின் உரிமையாளர் கிஷோர் கூறும்போது,

"ஆயன்குளம் அதிசய கிணறு நிறைந்துவிட்டது என சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து சபாநாயகர் இடம் தெரிவித்தோம். அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து பின் கிணற்றுக்கு தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

கூடுதலாக 200 கன அடி தண்ணீர் தருவதாக கூறியுள்ளனர். இதற்காக விவசாயிகள் சார்பாக நன்றி. இந்த கிணற்றில் தண்ணீர் விடுவதால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேரிக்காட்டு பகுதி மற்றும் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இப்போது சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிணறுகள் நிரம்பி வருகின்றன. விவசாயிகள் சார்பாக
முதலமைச்சருக்கு நன்றி" என கூறினார்.

Tags :
#ayankulamDelightfarmersNellaiWaterwell
Advertisement
Next Article