யுரேனஸை குறி வைத்த எலான் மஸ்க் - வெளியான அப்டேட்!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செவ்வாய் கிரகத்தில் அதிகமான மனிதர்களை அனுப்பும் திட்டம் வெற்றியடைந்த பின்னர், யுரேனஸை அடைவதே கனவு என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் பல நாடுகளும் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி அவற்றை விண்ணில் நிலை நிறுத்தி பயன்படுத்துகின்றன. தகவல் தொடர்பு, தட்பவெப்பம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை மிகப்பெரிய பலனை அளிக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்தியாவுக்காக மட்டுமல்லாது மற்ற பல நாடுகளுக்காகவும் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புகிறது. இதே போல வளர்ந்த நாடுகள் பலவும் செயற்கைகோள் தொழில்நுட்பத்தை வெகுவாக பயன்படுத்துகின்றன.
இதேபோல அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் மனிதர்களும் விண்ணுக்குச் சென்று வெற்றிகரமாக தரை இறங்கி வருகிறார்கள்.
இதையும் படியுங்கள் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி!
இந்நிலையில், எலான் மஸ்க் நேற்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :
"இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நான்காவது கிரகமான செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை அனுப்பி உள்ளோம். மேலும் செவ்வாய் கிரகத்தில் மில்லியனுக்கும் அதிகமான மனிதர்களை அனுப்புவது தான் அடுத்தகட்ட திட்டம். இந்த திட்டம் வெற்றி அடைந்த பின்னர், அடுத்து ஏழாவது கிரகமான யுரேனஸூக்கு மனிதர்களை அனுப்புவதே எனது கனவு"
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.