Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அண்ணன் இறந்த செய்தி கேட்டும், தனது கடமையை தவறாமல் செய்து முடித்த நியாய விலைக்கடை பெண் ஊழியர்!

10:00 PM Jan 11, 2024 IST | Web Editor
Advertisement

திருநெல்வேலியில் அண்ணன் இறந்த செய்தி கேட்டு தேம்பி அழுது கொண்டே கடமையை தவறாமல் செய்து முடித்த நியாய விலைக்கடை பெண் ஊழியரின் கடமை உணர்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் லீமா. இவர், திருநெல்வேலி
பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள நியாயவிலைக் கடை ஒன்றில் எழுத்தாளராக
பணிபுரிந்து வருகிறார். தற்போது, தமிழ்நாடு அரசு சார்பில் நியாய விலைக் கடைகளில்
அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் அடங்கிய பொங்கல்
தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. லீமா தான் பணிபுரியும் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

திடீரென அவருக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் லீமாவின் சகோதரர் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த லீமா அந்த இடத்திலேயே கண்ணீர் விட்டு தேம்பி அழுதுள்ளார். இருப்பினும், லீமா சில நிமிடங்களில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அழுதபடி கண்ணும் கருத்துமாக தனது பணியை தொடர்ந்தார். சகோதரர் இழப்பு அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்தாலும், கூட பொதுமக்கள் காலை முதல் பொங்கல் தொகுப்பு பெறுவதற்கு வரிசையில் காத்திருந்ததால் அவர்களை சிரமப்படுத்தாமல் சோகத்தை தனக்குள் வைத்துக் கொண்டு லீமா தொடர்ந்து பொங்கல் தொகுப்பை வழங்கி வந்தார்.

இதற்கிடையில், அருகில் இருந்த ஊழியர் ஒருவர் இந்த துக்கமான நேரத்தில் கூட பீமாவுக்கு ஆறுதல் சொல்வதை தவிர்த்து அவரிடம் சரி எழுந்திரீங்க எழுந்திரீங்க சார் வர்றாருன்னு வேலையை தொடரும்படி கூறிய சம்பவம் லீமாவை அதிர்ச்சி அடைய செய்தது. இருப்பினும், எதையும் பொருட்படுத்தாமல் லீமா தனது கடமையை தொடர்ந்து செய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags :
Female EmployeeNews7Tamilnews7TamilUpdatesRation ShopThachanallurTirunelveli
Advertisement
Next Article