Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

AFGVsNZ | டெஸ்ட் வரலாற்றில் முதல்முறை... ஒரு பந்து கூட வீசாமல் முடிந்த டெஸ்ட் போட்டி!

08:50 AM Sep 14, 2024 IST | Web Editor
Advertisement

ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

Advertisement

நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடந்த 9ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மைதானத்தில் நீர் தேங்கியது. இதனால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. மைதானத்தில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் தேங்கிய தண்ணீரை உடனடியாக வெளியேற்ற முடியவில்லை.

தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலையில் 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மைதான ஊழியர்கள் போராடி 3வது நாளான நேற்று முன்தினம் தண்ணீரை வெளியேற்றினர். ஆனால் மீண்டும் கிரேட்டர் நொய்டாவில் மழை பெய்ததன் காரணமாக இந்த போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் 91 வருடங்களில் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஒரு டெஸ்ட் போட்டி கைவிடப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த 1933 முதல் இதற்கு முன் இந்தியாவில் நடைபெற்ற எந்த டெஸ்ட் போட்டியும் இப்படி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதில்லை. இந்த போட்டி ரத்தான நிலையில், இந்திய வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

Tags :
afghanistanCricketIndiaNew ZealnadnoidaSportsTest Cricket
Advertisement
Next Article