Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#AFGvsBAN | முதல் ஒருநாள் போட்டி - வங்காளதேச அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி!

01:22 PM Nov 07, 2024 IST | Web Editor
Advertisement

வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஷார்ஜாவில் நேற்று (நவ.6) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் வங்காளதேச அணியில் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததது. ஆப்கானிஸ்தான் அணி வீரர்களான குர்பாஸ் 5 ரன்களிலும், செட்குல்லா அடல் 21 ரன்களிலும், ரஹ்மத் 2 ரன்களிலும் , அஸ்மத்துல்லா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு, ஜோடி சேர்ந்த முகமது நபி, ஷாஹிதி ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நபி 84 ரன்களிலும், ஷாஹிதி 52 ரன்களிலும் வெளியேறினர்.

இறுதியில் 49.4 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 235 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி தரப்பில் முஸ்தாபிசுர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 236 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணிஅடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் வங்காளதேச அணி 34.3 ஓவர்களில் 143 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 92 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அல்லா கசன்ஃபர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Advertisement
Next Article