Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Chennai மக்கள் கவனத்திற்கு! அக்.06 அன்று விமானப் படை சாகச நிகழ்ச்சி எதிரொலி! போக்குவரத்து மாற்றம்!

09:26 PM Oct 04, 2024 IST | Web Editor
Advertisement

மெரினா கடற்கரையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள விமானப் படை சாகச நிகழ்ச்சி காரணமாக, அன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

"காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் இலக்கை அடைய சர்தார் படேல் சாலை காந்தி மண்டபம் சாலை அண்ணாசாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதேபோல், பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, அவர்கள் தங்களுடைய இலக்கை அடைய அண்ணாசாலை தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

அண்ணா சிலையிலிருந்து MTC பேருந்துகள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேனி நெடுஞ்சாலை ரோடு, ரத்னா கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம். தெரு. மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். இதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி RA புரம் 2வது பிரதான சாலை TTK சாலை RK சாலை அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் காலை 09.30 மணிக்கு மூடப்படும். எனவே, தனியார் வாகனத்தில் நிகழ்ச்சியை பார்வையிட விரும்பும் பார்வையாளர்கள் கூடிய விரைவில் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏர் ஷோவை பார்வையிட வாகன ஓட்டிகள் அண்ணாசாலை, வாலாஜா சாலை மற்றும் சுவாமி சிவானந்தா சாலையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எதிர்பார்க்கப்படும் மக்கள் கூட்டம் மற்றும் வாகனங்களின் அடர்த்தி காரணமாக, 06.10.2024 அன்று சென்னை முழுவதும் சிரமமில்லாமல் பயணிக்க, MTC பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் MRTS ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

MTC சிற்றூந்துகள் மூலம் அண்ணாசாலை மெட்ரோவில் இருந்து சிவானந்தா சாலையில் டிவி ஸ்டேசன் வரையிலும், வாலாஜா ரோட்டில் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு வரையிலும், ஆர்.கே சலையில் வி.எம் தெரு சந்திப்பு வரையிலும் மாநகர பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags :
AirforceChennaiIndian Air ForceIndian Airfoce DayMarianMarina Beachnews7 tamil
Advertisement
Next Article