Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்த ஆதித்ய ஸ்ரீவஸ்தவா! யார் இவர்?

05:02 PM Apr 16, 2024 IST | Web Editor
Advertisement

2023 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.  இதில் லக்னோவைச் சேர்ந்த ஆதித்ய ஸ்ரீவஸ்தவா முதலிடம் பிடித்துள்ளார்.  

Advertisement

மத்திய அரசு பணிகளான ஐஏஎஸ்,  ஐஎஃப்எஸ்,  ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகள் மற்றும் குரூப் ’ஏ’ மற்றும் குரூப் ’பி’ பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்றன.  இதில் மூன்று கட்டங்களிலும் தேர்ச்சி பெற்று,  தேர்வு செய்யப்படுவோருக்கு அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், பணிகள் ஒதுக்கப்படும்.

மூன்று நிலைகளில் நடத்தப்படும் 2023 யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் மே 28ஆம் தேதி அன்று நடத்தப்பட்டு,  அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மெயின் தேர்வு செப்டம்பர் 15, 2023 அன்று முதல் ஐந்து நாட்களுக்கு நடத்தப்பட்டது.  மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2024 ஜனவரி 4 முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் யுபிஎஸ்சி தேர்வு ஆணையம் சிஎஸ்சி தேர்வு முடிவுகளை தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  இதில், 1143 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இத்தேர்வில் லக்னோவை சேர்ந்த ஆதித்ய ஸ்ரீவஸ்தவா என்பவர் முதலிடம் பிடித்து உள்ளார்.

ஆதித்யா ஸ்ரீவஸ்தவா லக்னோவைச் சேர்ந்தவர்.  இவர் சிஎம்எஸ் லக்னோ அலிகஞ்ச் கிளையில் பள்ளிப்படிப்பை முடித்தார்.  அவர்  12 ஆம் வகுப்பில் 95% மதிப்பெண் பெற்று தனது வகுப்பில் முதலிடம் பிடித்தார்.  பின்னர் அவர் ஐஐடி கான்பூரில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிடெக் படித்தார்.   அவர் UPSC தேர்வில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தை விருப்ப பாடமாக கொண்டு தகுதி பெற்றார்.

மேலும்,  ஆதித்ய ஸ்ரீவஸ்தவா கோல்ட்மேன் சாக்ஸில் 15 மாதங்கள் பணிபுரிந்துள்ளார்.  யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானதும்,  சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு  வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Aditya SrivastavaCivil Services Exam 2023LucknowUPSCUPSC Civil Services
Advertisement
Next Article