ஆதித்யா எல்1 விண்கலம் - இஸ்ரோவின் அடுத்த அப்டேட்!
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்தின் மேக்னட்டோமீட்டரின் சென்சார் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியுள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல்1 என்ற விண்கலம், சூரியனை ஆய்வு செய்யவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் இஸ்ரோவால் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ எனும் இடத்தில் இந்த விண்கலத்தை நிலைநிறுத்துவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆதித்யா எல்1 விண்கலம் அதன் எல்1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
இதையும் படியுங்கள்: “சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தொடர்ந்து ஆதித்யா எல்1 விண்கலம், அதன் இலக்கான ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ என்ற பகுதியை ஜன.6 எட்டியது. உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது நாடாக இந்தியா இந்த வரலாற்று சாதனையை படைத்தது. இந்த நிலையில் ஆதித்யா எல்1 விண்கலத்தின் மேக்னடோமீட்டர் பூம் ஆய்வு கருவி வெற்றிகரமாக செயல்பட தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.