இடைக்காட்டூர் இருதய ஆண்டவர் ஆலய தேர் பவனி - ஏராளமானோர் பங்கேற்பு!
மானாமதுரை அருகே இடைக்காட்டூர் இருதய ஆண்டவர் ஆலய தேர் பவனி விழா வெகு விமரிசையான நடைபெற்றது.
மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர்
ஆலயம் உள்ளது. தமிழ்நாடு அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி
நடைபெறுவது வழக்கம். மேலும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கிய விழாக்களில் இங்கு சிறப்பு திருப்பலி நடைபெறும்.
அன்றைய தினங்களில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் இங்கு வருகை தந்து, இந்த திருப்பலி நிகழ்ச்சியில் கலந்து கொள்வர். இந்த ஆலயம் தமிழ்நாட்டிலேயே ஏசுநாதர் தனது இடது பக்கத்தில் இருதயத்தை காண்பித்தப்படி உள்ள ஒரே ஆலயம் என்று கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதல் 10 நாட்கள் தேர்பவனி திருவிழா சிறப்பாக நடைபெறும்.
இதனையடுத்து, தினந்தோறும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் 9ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு தேர் பவனி விழா நடைபெற்றது. விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து 10ம் நாளான இன்று நற்கருணை நிகழ்ச்சியுடன் இவ்விழா நிறைவு பெறுகிறது.