"சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி விதிப்பு" - டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே 30 சதவீதம் வரி விதிக்கப்படும் நிலையில் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் வரி 130 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.
இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெறும் எபிஇசி கூட்டத்தில் பங்கேற்க உள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேச இருந்தனர். ஆனால், சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி விதித்துள்ள அதிபர் டிரம்ப் இம்மாத இறுதியில் சீனா அதிபரை சந்திக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, சீன பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.