Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"அதானி விவகாரம் தனிப்பட்ட பிரச்னை அல்ல, தேசத்தை பற்றியது" - ராகுல் காந்தி விமர்சனம்!

அதானி விவகாரம் தனிப்பட்ட பிரச்னை அல்ல, தேசத்தை பற்றியது என பிரதமர் மோடியின் கருத்து குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வினர்சனம் செய்துள்ளார்.
06:48 AM Feb 22, 2025 IST | Web Editor
Advertisement

சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியிடம், அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து அதிபர் டிரம்புடன் விவாதிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த பிரதமர் மோடி, தனிப்பட்ட பிரச்னைகளை இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.

Advertisement

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக உத்தரப் பிரதேசம் வந்துள்ளார். அப்போது லால்கஞ்சில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது,

"அமெரிக்காவில் அதானி குறித்த கேள்விக்கு அது தனிப்பட்ட பிரச்னை என்றும், இரண்டு தலைவர்கள் சந்திக்கும்போது இதுபோன்ற பிரச்னைகள் விவாதிக்கப்படுவதில்லை என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார். இது தனிப்பட்ட விவகாரம் அல்ல. இது தேசத்தின் விவகாரம். அமெரிக்காவில் அதானிக்கு எதிராக ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் அது தனிப்பட்ட விவகாரம் என்றும் அது பற்றி நாங்கள் பேசப் போவதில்லை என்றும் பிரதமர் கூறுகிறார்.

அவர் உண்மையிலேயே இந்தியாவின் பிரதமராக இருந்திருந்தால் இந்த விவகாரம் குறித்து டிரம்பிடம் கேட்டிருப்பார். தேவைப்பட்டால் அமெரிக்காவுக்கு விசாரணைக்காக அதானியை அனுப்பியிருப்பார்.உத்தர பிரதேச அரசானது வேலையின்மை மற்றும் பணவீக்கத்தை நிவர்த்தி செய்வதற்கு தவறிவிட்டது. மத்திய அரசு தனியார் மயமாக்கலை நாடுகின்றது. உத்தர பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசு அல்ல, என்ஜினே இல்லாத அரசாகும்"

இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

Tags :
AdanimodiNarendra modiPMO IndiaRahul gandhi
Advertisement
Next Article