இயக்குனர் ராஜ் நிதிமோருவை மணந்தார் நடிகை செய்தார் சமந்தா!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டார்.
நடிகை சமந்தா, ராஜ் நிதிமோர் இயக்கிய தி பேமலி மேன் 2-ஆம் பாகத்தில் நடித்திருந்ததார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் தகவல்கள் பரவின.
இந்த நிலையில் இன்று கோவை ஈஷா மையத்தில் நடிகை சமந்தா மற்றும் இயக்குனர் ராஜ் ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே இயக்குநர் ராஜ்வுடனான திருமணத்தை நடிகை சமந்தா போட்டோ வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ராஜ் நிதிமோர் பல்வேறு பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் இணையத்தொடர்களை இயக்கி, தயாரித்துள்ளார். சமீபத்தில் தி பேமலி மேன் 3-வது பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. ராஜ் நிதிமோர் இயக்கிய தி பேமலி மேன் 2-ஆம் பாகத்தில் நடித்திருந்ததார்.