Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கேரள மகளிர் கிரிக்கெட் அணியுடன் கைகோர்த்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

03:37 PM Nov 22, 2023 IST | Web Editor
Advertisement

கேரள மாநிலத்தின் மகளிர் கிரிக்கெட் அணியின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Advertisement

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரள கிரிக்கெட் சங்கம்(கேசிஏ) நிகழ்வில்,  மகளிர் அணிக்கான விளம்பர தூதராக கீர்த்தி சுரேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து,  திருவனந்தபுரத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள டிக்கெட் விற்பனையையும் கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்தார்.

பின்னர் தேசிய அணிக்காக முதல் தரப் போட்டிகளில் விளையாட தகுதி பெற்ற கேரளத்தை சேர்ந்த வீராங்கனை மின்னு மணியை வாழ்த்திப் பாராட்டினார்.  மேலும், கேரள மகளிர் கிரிக்கெட் அணியின் ஆடையை அணிந்து கொண்டு வீராங்கனைகளுடன் கீர்த்தி சுரேஷ் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Tags :
Cricketindian actressKeerthy SureshKeralaKerala womens cricket teamnews7 tamilNews7 Tamil Updateswomens cricket
Advertisement
Next Article