நடிகை ஹனி ரோஸ் வழக்கு - தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு நிபந்தனை ஜாமின்!
பிரபல நடிகை ஹனி ரோஸ், கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் தன்னை நிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்ததாகவும், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால் இரட்டை அர்த்தம் கொண்ட தவறான வார்த்தைகளை தன்மீது பொது தளத்தில் பயன்படுத்தி வருவதாகவும், இதைகுறித்து யாரும் அவரிடம் கேட்கவில்லை எனவும் முகநூலில் பதிவு செய்தார்.
இதை பார்த்த 30க்கும் மேற்பட்டோர் உடனே ஹனி ரோஸின் போஸ்டுக்கு முகநூலில் ஆபாசமாக கருத்து தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஹனி ரோஸ் கொச்சி நடிகர்கள் சங்கம் மற்றும் எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். புகாரின் பெயரில் போலீசார் 27 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், கும்மளம் பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவர் முதலாக கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து வயநாட்டில் வைத்து பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கைது செய்யபட்ட பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு 6 நாட்களுக்கு பின் நிபந்தனை ஜாமின் வழங்கி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.