Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தில் இணைந்தார் நடிகை அபர்ணா பாலமுரளி!

08:06 PM Feb 25, 2024 IST | Web Editor
Advertisement

தனுஷ் நடித்து இயக்கும் “ராயன்” திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ படம் கலவையான வரவேற்பை பெற்றது.  இதனையடுத்து நடிகர் தனுஷ் எந்த படத்தில் நடிக்கிறார், அதில் யார் இயக்குநர் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது. இதற்கிடையே தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குவதாகவும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால், ஜெயராம் காளிதாஸ்,  துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. வடசென்னையை மையமாக கொண்ட இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க உள்ளார்.  எஸ்.ஜே.சூர்யா மற்றும் சந்திப் கிஷான் ஆகிய இருவரும் தனுஷின் சகோதரர்களாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக அண்மையில் கூறப்பட்டது.  ராயன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிரபல இயக்குனரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் இணைந்த தகவலும் அண்மையில் வெளியானது.

இப்படி, “ராயன்” படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், படக்குழு மேலும் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, ராயன் படத்தின் அபர்ணா பாலமுரளி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து படக்குழு தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் அபர்ணாவின் கதாபாத்திர தோற்றம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.  தற்போது இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

Tags :
Aparna Balamuraliar rahmand50DhanushDushara VijayanRaayanSelvaraghavan
Advertisement
Next Article