Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் சங்க செயற்குழு கூட்டம் | முதலமைச்சர் #MKStalin-க்கு நன்றி தெரிவித்து தீர்மானம்!

01:48 PM Sep 08, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது ஆண்டு பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐந்து தீர்மானங்கள்:

    1. பாராம்பரியமிக்க நம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காகவும், உறுப்பினர்களுக்காகவும் அனைத்து வகையிலும் ஆதரவளித்து உறுதுணையாக இருக்கும் முதலமைச்சர் மரியாதைக்குரிய மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், சங்க உறுப்பினரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பெருமக்களுக்கும், அரசு செயலாளர்களுக்கும், அரசுத்துறை இயக்குனர்களுக்கும் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

    2. தமிழ் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னையை மழப் பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ.500 போம் மற்றுமீட்டில் உருவாக்கப்படும் இரைப்படம் நகரம் குறித்த அறிவிப்பும் கட்டம் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்த வெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ள முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்தின நடிகர் சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

    3. நமது சங்க துணைத்தலைவர் பூச்சி எஸ். முருகன் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு உடனடியாக எடுத்துச்சென்றதன் அடிப்படையில் முதலமைச்சர் உத்தரவின்படி போக்குவரத்துத்துறை அமைச்சர் கிராமிய கலைஞர்கள் அரசு பேருந்தில் செல்லும்போது 50 சதவீத கட்டண சலுகையுடனும் இசைகருவிகள் மற்றும் கலைப்பொருட்களை கட்டணமில்லாமல் எடுத்துச்செல்வதற்கு ஆணை வழங்கியதற்கு முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

    4. தமிழ்நாடு அரசின் மதிப்புமிக்க விருதான கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் 60 வயது நிறைவடைந்திருப்பின் அவருடன் உதவியாளர் ஒருவரும் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என அறிவித்த முதலமைச்சர் அவர்களுக்கும் மற்றும் கலை மற்றும் பண்பாடு துறை அமைச்சர் அவர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

    5.நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 2020-21 மற்றும் 2021-22-ஆம் ஆண்டுகளுக்கான தெரிவு செய்யப்பட்ட 1000 நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு 1.04.2023 முதல் மாதந்தோறும் ரூ.3,000/- வீதம் நிதியுதவி வழங்கிடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாதாந்திர நிதியுதவிக்கான ஆணை வழங்கியதற்கு நமது நடிகர் சங்கம் சார்பாக முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

    Tags :
    MK StalinSIAAUdhayanidhi stalin
    Advertisement
    Next Article