Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் - நடிகர் விஷால்!

08:53 AM Nov 29, 2023 IST | Web Editor
Advertisement
மும்பை சிபிஐ அலுவலகத்தில் விசாரணை முடிந்தபின் படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக போராட முன்வர வேண்டும் நடிகர் விஷால்  தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஹரி. அவர் இயக்கிய சாமி,  ஆறு,  சிங்கம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றவை. சமீபத்தில் அவர் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார்.  இந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை.  இதற்கு அடுத்து ஹரி தற்போது விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இதையும் படியுங்கள் : சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே செல்லும் இரவு ரயில் இன்று முதல் ரத்து -தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தாமிரபரணி,  பூஜை ஆகிய படங்களுக்குப் பிறகு இருவரும் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைகின்றனர்.  கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இந்த படத்தை குறுகிய காலத்தில் படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.  திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் அடுத்தடுத்து நடந்து வந்தது.  படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க,  யோகி பாபு நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்.

Advertisement

இந்த நிலையில்,  மார்க் ஆண்டனி திரைப்படத்தை இந்தியில் வெளியிட தணிக்கை சான்று பெறுவதற்கு மத்திய தணிக்கை வாரிய அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் வாங்கியாக நடிகர் விஷால் அளித்த புகாரை தொடர்ந்து 3 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

 

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் மற்றும் அவரது மேலாளர் ஹரிகிருஷ்ணன் விசாரணைக்காக ஆஜரானார்.
அதனை தொடர்ந்து, மும்பை சிபிஐ அலுவலகத்தில் விசாரணை முடிந்தபின் படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக போராட முன்வர வேண்டும் நடிகர் விஷால் தனது X வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
Tags :
#Againstactor vishalcorruptionFight
Advertisement
Next Article