அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் - தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்!
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்னும் புதிய கட்சியை தொடங்கியுள்ளளார். இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள், தொண்டர்கள் என பல்வேறு நபர்கள் குவிந்து சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு பேரணியாக சென்றனர். அங்கு பட்டாசு வெடித்து அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
செஞ்சி நான்கு முனை சந்திப்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மகளிர்க்கு புடவைகள் வழங்கினர்.
புதுச்சேரியில் அண்ணா சிலை அருகே விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் பேருந்து நிலையம் அருகே விஜய் ரசிகர் மன்றத்தினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். கடலூரில் பெரியார் சிலை அம்பேத்கர் சிலை மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். வடசென்னை தொகுதிக்குட்பட்ட எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தினர் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் ஊர்வலமாக வந்து பட்டாசுகளை வெடித்தும் கடைகள் மற்றும் மாநகரப் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பயணிகளிடம் இனிப்புகளை வழங்கினர். பின்னர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
திருச்செந்தூர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அதனுடன் அவர்கள் 2026-ம் ஆண்டின் முதல்வர் விஜய் எனவும் கோசமிட்டனர். நாமக்கல் பூங்கா சாலையில் மாவட்ட தலைவர் சதீஷ் தலைமையில் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தெற்கு மாவட்ட தலைவர் ஏனாதி மதன் தலைமையில் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் வெடி வெடித்து ,பேண்டு வாத்தியங்களுடன் ஆடி, பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.