Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சத்யராஜூக்கு சமமாக படம் நடிக்க வேண்டும் - நடிகர் விஜய் சேதுபதி பேச்சு!

03:22 PM Jan 18, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் சத்யராஜூக்கு சரிக்கு சமமாக ஒரு படம் பண்ண வேண்டும் என ஆசைப்படுவதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Advertisement

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் - ஐசரி கணேஷ் தயாரித்து கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படம் சிங்கப்பூர் சலூன். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், ரோபோ சங்கர், தலைவாசல் விஜய், ஜான் விஜய், கிஷான் தாஸ், தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், கே.ராஜன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, இயக்குநர் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்ததாவது:

“நான் வந்தது புரமோஷனுக்கு தான். படத்தின் தலைப்பு மிகவும் நன்றாக இருக்கிறது. பாலாஜியும் நானும் ரொம்ப நாள் முன்பே படம் பண்ணுவது பற்றி பேசி இருக்கிறோம். யாரும் கான்ட்ரோவர்சியாக பேசவில்லை. ராஜன் பேசுவார்னு பார்த்தால் அவரும் பேசவில்லை. அதனால் தான் நான் பேசுகிறேன். இயக்குநர் கோகுல் மிகவும் டார்ச்சர். அவருடன் வேலை செய்த 2 படமும் பெரிய அனுபவம். கோகுல் சார் உங்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

சத்யராஜ் மிகப்பெரிய நடிகர். நான் அவரை மிகவும் ரசித்திருக்கிறேன். அவரை பார்ப்பது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. நடிகன், அமைதிப்படை படங்களே அதற்கு உதாரணம். அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்பதும் தெரியும். அவருக்கு சரிக்கு சமமாக ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது” என்றும் கூறினார்.

Tags :
#VJSCinema updatesDirector GokulNews7Tamilnews7TamilUpdatesRed Giant MoviesRJ BalajiSathyarajSingapore SaloonVels Film Intlvijay sethupathy
Advertisement
Next Article