Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'G.O.A.T' படப்பிடிப்புக்காக துபாய் சென்றார் நடிகர் விஜய்!

02:04 PM Apr 05, 2024 IST | Web Editor
Advertisement

'G.O.A.T'  திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய்,  துபாய் புறப்பட்டார்.

Advertisement

‘லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்,  வெங்கட் பிரபு இயக்கத்தில்  ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார்.  இது விஜய்யின் 68-வது திரைப்படமாகும்.  இப்படத்தில் ஜெயராம்,  பிரபு தேவா,  மோகன்,  பிரஷாந்த்,  வைபவ்,  சினேகா,  லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 25 உத்தரவாதங்கள்: வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள்!

இந்த திரைப்படத்தில் த்ரிஷா கேமியோ ரோலில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  ‘The Greatest of All Time’ திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகி வருவதாகவும்,  அதில் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் விஜய் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா,  பாங்காக் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரளாவிலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கிற்காக சென்ற விஜய்க்கு,  கேரள ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தது தொடர்பான புகைப்படங்களும்,  வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலானது.  நடிகர் விஜய்யும் தனது சமூக ஊடக பக்கங்களில் அந்த வீடியோக்களை பகிர்ந்திருந்தார்.

தற்போது திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  இந்நிலையில், 'G.O.A.T'  திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய்,  சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்டு சென்றுள்ளார்.

Tags :
#cinemaupdatesAGS25DubaigoatGreatestOfAllTimemovieThalapathy68vijay
Advertisement
Next Article