Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#TVK கொடியில் இருப்பது என்ன?

10:04 AM Aug 22, 2024 IST | Web Editor
Advertisement

சிவப்பு, மஞ்சள் வண்ணங்கள் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அதன் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Advertisement

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். இந்நிலையில் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கொடி அறிமுக விழா மற்றும் கட்சியின் பாடல் அறிமுக நிகழ்ச்சியானது இன்று நடைபெற்றது. கொடி எவ்வாறு இருக்கும் என்று தமிழக மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விஜய் 9 மணி 15 நிமிடம் அளவில் தனது வீட்டில் இருந்து பனையூர் தலைமை அலுவலகம் வந்தார். தளபதி தளபதி என்ற பாடல் ஒலிக்க அதிரடியாக நுழைந்தார் நடிகர் விஜய். இதனைத்தொடர்ந்து நிர்வாகிகளுடன் குழுப்புகைப்படம் எடுத்துகொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை வழங்கி அனைவரையும் வரவேற்றார். இதனைத்தொடர்ந்து உறுதிமொழி கடிதத்தை வாசித்த பின்னர் இரண்டு யானைகளுடன் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் நடுவில் வாகை மலருடன் கூடிய கொடியை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்து அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 40 அடி கம்பத்தில் கொடி ஏற்றினார்.

தவெக கொடியில் இருப்பது என்ன?

Tags :
Thalapathythalapathy vijaytvkTVK PartyTVK Vijay
Advertisement
Next Article