Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் சூரியின் ‘கொட்டுக்காளி’ படம் ஆகஸ்ட் 23-ல் வெளியீடு!

06:51 PM Jul 23, 2024 IST | Web Editor
Advertisement

சூரி, அன்னாபென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

‘கூழாங்கல்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கொட்டுக்காளி’ திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்சன்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

இத்திரைப்படம்  53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை வென்று அசத்தியது. முன்னதாக, இந்த திரைப்படம் 74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஃபோரம் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டு 16 பிப்ரவரி 2024 அன்று திரையிடப்பட்டது. இதன் மூலம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை கொட்டுக்காளி திரைப்படம் பெற்றது.

இந்நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார். மூட நம்பிக்கை, ஆணாதிக்கம் மற்றும் சிக்கலான மனித உணர்வுகள் குறித்து இப்படம் பேசும் என இயக்குநர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
'Kottukali'Actor sooriCinema updatesKottukkaaliNews7Tamilnews7TamilUpdatesPs VinothrajSoori
Advertisement
Next Article