Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதுமணத் தம்பதி கீர்த்தி சுரேஷ் - ஆண்டனிக்கு நடிகர் #Soori வாழ்த்து!

10:21 AM Dec 23, 2024 IST | Web Editor
Advertisement

புதுமணத் தம்பதி கீர்த்தி சுரேஷ் - ஆண்டனிக்கு நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் ரஜினிமுருகன், ரெமோ, பைரவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகையர் திலகம்' படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்தது.
தற்போது இவர் அட்லி இயக்கத்தில் உருவான பேபிஜான் என்ற இந்தி படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதற்கிடையே, கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கடந்த 12ம் தேதி கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் நட்சத்திர பட்டாளமே கலந்துக்கொண்டது. இந்தசூழலில், புதுமணத் தம்பதி கீர்த்தி சுரேஷ் - ஆண்டனிக்கு பலவேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சூரி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'என் செல்ல தங்கை மற்றும் அன்பு மாப்பிள்ளை, உங்கள் மணவாழ்வு என்றும் மகிழ்ச்சியும் நேசமும் நிரம்பி, அழகான நினைவுகளால் நிறைந்ததாய் தொடரட்டும். ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வாழ வாழ்த்துகள்!' இவ்வாறு நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article