Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தக் லைப் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்த நடிகர் சிம்பு!

07:02 PM May 27, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் சிம்பு ‘தக் லைப்’ திரைப்பட படப்பிடிப்பில் ரசிகர்களைச் சந்தித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’  திரைப்படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார். இந்த திரைப்படத்தில் த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக இணைந்து தயாரிக்கின்றன.

நடிகர் துல்கர் சல்மான் இந்த திரைப்படத்தில் இருந்து விலகியதும் அவருக்குப் பதிலாக நடிகர் சிம்பு இணைந்தார். அதேபோல, நடிகர் ஜெயம் ரவியும் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், இறுதியில் அவரும் விலகியதால், ஜெயம் ரவியின் கதாபாத்திரத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிக்கிறார். முன்னதாக, இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு இணைந்த விடியோவைப் படக்குழுவினர் வெளியிட்டனர்.

இதையும் படியுங்கள் : ‘மே 31ம் தேதி ஆஜராகிறேன்’ – ஆபாச வீடியோ வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டு பேச்சு!

இந்நிலையில்,‘தக் லைப்’  திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, செர்பியா, மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில்
துவங்கியுள்ளது. இந்நிலையில்,  ‘தக் லைப்’  திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் சிம்பு ரசிகர்களைச் சந்தித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
#cinemaupdatesARRahmanKamalhaasanManirathnamNewThugSilambarasansimbuThugLife
Advertisement
Next Article